By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Deen JourneyDeen JourneyDeen Journey
  • Home
  • Blog/Articles
    • Hadith & Sunnah
    • Islamic History
    • Quran & Tafsir
  • Family & Society
    • Islamic Parenting
    • Marriage & Relationships
    • Social Justice
  • Learn Islam
    • Aqeedah
    • Duas & Dhikr
    • Fiqh Simplified
    • Pillars of Islam
  • Spirituality
    • Ramadan & Eid Resources
    • Stories of the Pious
    • Tazkiyah
  • Books
  • About Us
  • Contact
Notification Show More
Font ResizerAa
Deen JourneyDeen Journey
Font ResizerAa
  • Home
  • Blog/Articles
  • Family & Society
  • Learn Islam
  • Spirituality
  • Books
  • About Us
  • Contact
  • Home
  • Blog/Articles
    • Hadith & Sunnah
    • Islamic History
    • Quran & Tafsir
  • Family & Society
    • Islamic Parenting
    • Marriage & Relationships
    • Social Justice
  • Learn Islam
    • Aqeedah
    • Duas & Dhikr
    • Fiqh Simplified
    • Pillars of Islam
  • Spirituality
    • Ramadan & Eid Resources
    • Stories of the Pious
    • Tazkiyah
  • Books
  • About Us
  • Contact
Follow US
Articles

பெற்றோரைப் பேணுதல்: வாழ்க்கையின் முக்கியப் பொறுப்பு

Fathima Imasha (Dip in Psychology)
Last updated: March 7, 2025 10:29 am
By Fathima Imasha (Dip in Psychology)
Share
2 Min Read
SHARE

பெற்றோரைப் பேணுதல் என்பது மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கடமையாகும். இது சமூகம், மதம் மற்றும் மனித உறவுகளில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், பலர் பெற்றோரைப் பேணுதல் என்றால் அவர்களுக்கு மாதாந்தம் சில பணம் கொடுத்து விடுவதையோ, பண்டிகை நாட்களில் அவர்களுக்கு பரிசு வழங்குவதையோ மட்டுமே நினைக்கின்றனர். உண்மையில், பெற்றோரின் உணர்வுகளை மதித்து, அவர்களிடம் நேரம் செலவிட்டு, அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுடன் உறவாடுவதுதான் உண்மையான பேணுதலாகும்.

Contents
பெற்றோரைப் பேணுதல் – இஸ்லாமிய பார்வைஅன்பின் பெறுமதிபெற்றோரை உண்மையில் பேணுவது என்றால் என்ன?மறுமை மற்றும் பெற்றோரின் பிரார்த்தனைமுடிவுரை

பெற்றோரைப் பேணுதல் – இஸ்லாமிய பார்வை

இஸ்லாத்தில் பெற்றோரைக் கவனிப்பதற்கு மிக உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுவதற்கேற்றபடி, பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாது, அவர்களுடன் மென்மையான, அன்பு நிறைந்த உறவை பேணுவதும் மிகவும் முக்கியமானதாகும்.

அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலும் பெற்றோரின் முக்கியத்துவம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் மனிதனின் வாழ்க்கையில், தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவதற்குப் பிறகு, பெற்றோருக்குப் பணிவிடை செய்தல் என்பது அல்லாஹ்வுக்குப் பிடித்த செயல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெற்றோரின் பெறுமதி எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்த்துகிறது.

அன்பின் பெறுமதி

ஒருவருக்கொருவர் செலுத்தும் உண்மையான அன்பு மதிப்பற்றதொன்றாகும். ஆனால், இன்றைய உலகில் பொருளாதார வசதியுள்ளவர்களிடம் மட்டுமே அன்பு செலுத்தப்படுவது, அவர்களின் செல்வத்திற்காக மட்டுமே மக்கள் அவர்களை மதிப்பது போன்ற சமூக நிகழ்வுகளை நாம் காணலாம். ஆனால் பெற்றோர்கள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் மக்களுக்குத் துயரமின்றி அன்பளிக்கின்றனர். இவர்களின் அன்புக்கு ஈடாக எதையும் வழங்க முடியாது.

பெற்றோரை உண்மையில் பேணுவது என்றால் என்ன?

பலர் பெற்றோரைப் பேணுதல் என்பது உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்குவதென்று மட்டுமே எண்ணுகின்றனர். ஆனால், உண்மையான பேணுதல் என்பது:

  1. அவர்களிடம் நேரம் செலவிடுதல் – பெற்றோருடன் அதிக நேரம் கழிக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை, சிந்தனைகளை கேட்க வேண்டும்.
  2. அவர்களை மதித்து நடந்து கொள்வது – பெற்றோரின் மனநிலையை புரிந்து கொண்டு, அவர்களை கவனமாக அணுக வேண்டும்.
  3. அவர்களுக்கு நன்மை செய்வது – எந்த சிக்கலிலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
  4. அன்பையும் கருணையையும் பகிர்ந்து கொள்வது – பொருள் மட்டுமல்ல, மனதளவில் அவர்களுடன் பிணைப்பு ஏற்படுத்துவது மிக முக்கியம்.

மறுமை மற்றும் பெற்றோரின் பிரார்த்தனை

நாம் நம்முடைய வாழ்க்கையில் பல நற்செயல்களைச் செய்வோம். ஆனால், ஒருவருக்கு ஒரு உண்மையான தீவினை ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து மீள, அவர்களுக்கு பெற்றோரைப் பேணியதன் பலன் பெரும் உதவியாக இருக்கும். ஒரு தாயின் பிரார்த்தனை , ஒரு தந்தையின் பொருத்தம் , எந்த செல்வத்திற்கும் மாறாக ஒப்பிட முடியாததாகும்.

முடிவுரை

பெற்றோரின் அன்பு இந்த உலகில் கிடைக்கும் மிகப்பெரிய செல்வம். அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவர்களை மதித்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் துஆக்களை பெற வேண்டும். பெற்றோரைப் பேணுதல் என்பது பிணைப்பு மட்டும் அல்ல, அது வாழ்க்கையின் மிக முக்கியமான கடமையாகும். அவர்களின் பொருத்ததைப் பெற்றே நாம் வாழ்க்கையில் முன்னேறுகிறோம். எனவே, நாம் பெற்றோரை உண்மையாக மதிக்க வேண்டும், அவர்களின் அன்பின் மதிப்பை உணர வேண்டும், மற்றும் அவர்களுக்கு ஏற்ப தேவையான அனைத்தையும் செய்வதன் மூலம் நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

Share This Article
Facebook Twitter Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

🕌 இஸ்லாமிய கட்டுரைகள் எழுத ஆர்வமுள்ளவரா நீங்கள்?

✅ இஸ்லாமிய எழுத்தாளர்களை எங்கள் இணையதளத்திற்கு வரவேற்கின்றோம்.

✅ உங்கள் ஆழ்ந்த அறிவும், எழுத்துப் பாணியும் இங்கே மதிக்கப்படும்.
✅ வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் – இன்று தொடங்குங்கள்!

Apply Now
தக்வா (تقوى) – ஒரு ஆழமான பார்வை

அறிமுகம்இஸ்லாமிய வாழ்க்கை முறையின் அடிப்படை மரியாதையும், இறைநம்பிக்கையின் உச்ச வடிவமாகவும் தக்வா (Taqwa) கருதப்படுகிறது. தக்வா…

மறுமை நாள் – ஒரு விரிவான பார்வை

மறுமை நாள் அல்லது “கியாமத்துக் காலம்” என்பது இஸ்லாமியக் கொள்கையில் மிக முக்கியமான தூய மொழிபெயர்ச்சியாகக்…

இஸ்லாமிய கல்வியின் முக்கியத்துவம்

இஸ்லாமிய கல்வியின் முக்கியத்துவம் முன்னுரை: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.
Sign Up for Free

You Might Also Like

Articles

தினமும் ஓர் குர்ஆன் ஆயத்தில் இருந்து வாழ்க்கைக்கு ஓர் அறிவுரை! (DAY-10)

By Admin
புறம் பேசுதல் தவிர்ப்பது எப்படி? குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் வழிகள்
Articles

புறம் பேசுதல் தவிர்ப்பது எப்படி? குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் வழிகள்

By Admin

நல்வழி காட்டும் தூய ஹதீஸ்கள்

By Admin

இஸ்லாமிய நிதி மற்றும் வர்த்தக நெறிமுறைகள்

By Admin
Whatsapp Facebook Instagram
Company
  • Privacy Policy
  • Contact US
  • About Us
  • Feedback
  • Advertisement
More Info
  • Newsletter
  • Terms & Conditions
  • Books
  • Articles

WhatsApp Us to get Daily Updates

Subscribe to our WhatsApp group and don't miss out our daily udates.

WhatsApp Group
Join Group

Developed By Team Deenjourney.com

Welcome Back!

Sign in to your account